Thursday, February 24, 2011

நடுநிசி நாய்கள் - பட விமர்சனம்

கலை என்பது மக்களுக்காகத்தான். ஒவ்வொரு கலை வடிவமும் மக்களைப் பண்படுத்துவதாகவே இருக்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் பொழுதைக் கொல்லவாவது உதவ வேண்டும். அதுவே அந்தப் படைப்புக்குப் பெருமை தரும்.

மக்களின் வாழ்வியல் சார்ந்த அல்லது நடைமுறை வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாகக் கூறிக்கொண்டு தனது வக்கிரத்தையும், மன விகாரங்களையும் காட்சிப்படுத்துவதை கலையின் வடிவமாகப் பார்க்க முடியாது. சமூகம் அதை அனுமதிக்கவும் கூடாது.

கெளதம் மேனன் இந்த இரண்டாவது வகையில் சுலபமாக சேர்ந்திருக்கிறார், நடுநிசி நாய்கள் மூலம்.

இந்தப் படத்தின் கதை? அப்படி ஏதாவது இருந்தால்தானே சொல்வதற்கு. மிகக் கேவலமான சில சம்பவங்களால் மனச் சிதைவு, மனப் பிறழ்வு மற்றும் மனநோயின் வேறென்னென்ன வடிவங்கள் இருக்குமோ, இவை அனைத்தையும் கொண்ட ஒரு சைக்கோவைப் பற்றிய படம் இது.

ஆல்பர்ட் ஹிச்சாக்கின் சைகோ, அந்நியன் ஸ்பிளிட் பெர்சனாலிட்டி இரண்டையும் கலந்து ஒரு கேரக்டரை உருவாக்கி.. அவர் மூலமாக சமூகத்தின் இன்னொரு அசிங்கமான பக்கத்தை வெளிப்படுத்த முயன்றிருக்கிறார் கெளதம். ஆனால், அதைச் சொல்லும்போது அவர் காட்டும் காட்சிகளை ஜீரணிக்கவே முடியவில்லை.

முறைகேடான உறவுகள் (Incest) என்பது இந்த சமூகத்தின் மோசமான விஷம். சரியான மனநிலையில் உள்ள ஒருவனால் அப்படியொரு கோணத்தில் யோசிக்கவும் முடியாது. எனவே அதைப் படமாக எடுக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? இதை யாருக்காக சினிமாவாக எடுத்துள்ளார் கெளதம்?

வளர்த்த தாயையும் தெய்வத்துக்கு சமமாக மதிக்கும் பண்பைத்தான் முன்னோர்கள் இந்த சமுதாயத்தில் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அந்த புனித பிம்பத்தை உடைக்க வேண்டிய அவசியமே இல்லையே. வளர்த்த தாயுடன் ஒருவன் வன்புணர்ச்சி வைத்துக் கொள்வதாகக் காட்டுவதும், பெற்ற தந்தையுடன் குரூப் செக்ஸில் மகன் ஈடுபடுகிறான் என்பதாகக் காட்சிகள் வைப்பதும், மனச்சிதைவின் உச்சகட்டம் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.

கதாநாயகியின் தொப்புளில் கை படுவதே ஆபாசம் என்று வரையறை சொல்லும் சென்சார் அல்லது ராமேஸ்வரக் கரையில் கொடிய துன்பங்களை அனுபவிக்கும் அகதிகளின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட காட்சிக்கு அனுமதி மறுக்கும் சென்சார், இந்த நடுநிசி நாய்களின் வக்கிரக் காட்சிகளில் தூங்கிக் கொண்டிருந்ததா... புரியவில்லை!

இசை இல்லை, பாடல்கள் இல்லை... என இந்தப் படத்தில் ஏகப்பட்ட இல்லைகள். இவற்றுடன் இதையும் சேர்த்துக் கொள்ளலாம் கெளதம் மேனன், 'இது படமில்லை... விஷக் குப்பை'!

நடு நிசி நாய்கள் - வக்கிரக் 'குரைப்பு'

வக்கிரத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கெளதம் மேனனுக்கே உரிய போலீஸ் இன்வஸ்டிகேசன் கதை. அசிங்கத்தைக் கலக்காமல் மேனன் அதை தனது வழக்கமான ஸ்டைலிலேயே சொல்லியிருந்தால்

No comments:

Post a Comment