Saturday, February 5, 2011

தொடை நடிங்கி ரஜினிகாந்த்......


வரும் மே மாதம் நடைபெறப்போகும் தமிழகச் சட்டமன்றத் தேர்தல் போல ஒரு நெருக்கடியான தேர்தல் எதுமில்லை என்கிறார்கள். இந்தமுறை திமுக வந்துவிடக்கூடாது என்பதில்
தமிழர் அதரவு சக்திக்கள் முழுமூச்சாக கங்கனம் கட்டிக்கொண்டு இருக்க,  இந்த ஆதரவை தனக்குச்சாதகமாக திரட்ட பாகீரத பிரயத்தனம் செய்து வருகிறது அதிமுக.

இன்னொரு பக்கம் ஸ்பெக்ட்ரம் என்ற ஒருவார்த்தையைச் சொல்லியே திமுகவிடம் 70 சீட்டுக்கள், துணை முதல்வர் பதவியை சாதிக்க நினைக்கும் காங்கிரஸ், 50 சீட்டுக்களுக்கு ஒரு சீட்டு கூட குறையக்கூடாது என்று சொல்லும் பாமக ஆகிய தொந்தரவுகளை சமாளித்து கூட்டணி அமைக்கிறது திமுக.  அதேநேரம்,   அதிமுக அணி இம்முறை பலமாகிவிடும் என்பதை உணர்ந்து வாக்குகளை மகளீர் சுய உதவிக்குழுக்கள் மூலம் விலைகொடுத்து வாங்கத் தயாராகி விட்டதாம் திமுக.
இந்த இரண்டு அணிகளில் ரஜினி – விஜய் ஆகிய இரண்டு பேரின் ஆதரவு யாருக்கு என்பதுதான் தமிழ்மக்களை குடைந்தெடுக்கும் கேள்வி. இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு விஜய் அரசியலுக்கு வரமாட்டார் என்று விஜய் அப்பா சொல்லி விட்டாலும், எஸ்.ஏ. சந்திரசேகரன் ஜெயலலிதாவை சந்தித்த புகைப்படம், திருமணம் ஒன்றில் விஜய் ஜெயலலிதாவை சந்தித்த புகைபடம் இரண்டையும் போஸ்டராக அடித்து ஒட்டி ஆதரவு திரட்டப்போகிறதாம் அதிமுக.

சரி போகட்டும் விஜய்க்கு கொடுத்த நெருக்கடியில் அவர் அடக்கி வாசிக்கிறார் என்று வைத்துக்கொண்டாலும் ரஜினியின் நிலைபாடு என்ன என அதிமுக  வட்டாரத்தில் நகம் கடிக்கிறார்கள். ஆனால் ரஜினி, மீண்டும் ஷங்கர் இயக்கும் படத்தில் 2013-ல் நடிக்க ஒப்புகொண்டு ஒரு பெரிய தொகையை உதயநிதி ஸ்டாலீனிடம் இருந்து அட்வான்ஸாக பெற்றுக்கொண்டிருக்கிறார் என்றும்,  இதனால் திமுகவுக்கு எதிராக பேச முடியாது என்பதால், தேர்தல் நேரத்தில் ராணா படப்பிடிப்புக்காக நாட்டை விட்டு வெளியேறி பாங்காக் சென்று விட முடிவு செய்திருப்பதாகவும் ரஜினி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தமுறை ஓட்டுப் போடவே வரமாட்டாராம் ரஜினி. சூப்பர் பிளான்ணு சொல்லுவாங்களே அது இதுதான்!

No comments:

Post a Comment