Saturday, January 15, 2011

காவலன்: சினிமா விமர்சனம்

காலமெல்லாம் காதல் வாழ்க படத்தின் ஒன்லைன் தான் காவலன் கதையும்,
ஆனால் வித்தியாசமாக திரைக்கதை அமைத்து காமெடியை காதல் உணர்வில்
கலக்கி சித்திக் மீண்டும் வெற்றி பெற்று இருக்கிறார்.

ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக பரிமளித்த பின்னும், மாஸ் ஓப்பன் உள்ள ஒரு ஹீரோ இந்த மாதிரி காமெடி கம் காதல் கதையில் நடிக்க ஒத்துக்கொண்டதும்,தனது புதுமையான நடிப்பினை வெளிப்படுத்தி மனம் கவர்ந்ததும் விஜயை பாராட்ட வைக்கிறது.

தொடர்ந்து 6 தோல்விப்படங்கள் கொடுத்த அயர்ச்சி, அரசியல் கட்சி 
ஆரம்பிக்கலாமா? வேண்டாமா? என்ற குழப்பம், இந்த சாஃப்ட் சப்ஜெக்ட்டை
ரசிகர்களும் ,மக்களும் ஏற்றுக்கொள்வார்களா என்ற தயக்கம் இதெல்லாமே 
விஜய் -ன் முகத்தில் ஏற்றுக்கொண்ட கேரக்டரின் தன்மையை மீறி
தெரிவதும், அவரது முகத்தில் ஒரு டல்னெஸ் தெரிவதும் வருத்தம் தரக்கூடிய
மாற்றம்.

ஆனால் இதெல்லாம் படத்தின் இடைவேளை வரைதான்.
கதையின் ஜீவனாக விளங்கும் படத்தின் பின் பாதியில் விஜய் -ன்
கலக்கலான நடிப்பு பார்ப்பவர்களை வியக்க வைக்கிறது.அது வரை 
வடிவேலுவும், இயக்குநரும் படத்தை தாங்கி நிற்பதும், அதற்குப்பிறகு 
விஜய் தூண் மாதிரி நின்று படத்தை காப்பாற்றுவதும் ரசிக்க வைக்கும்
ஆரோக்கியமான போட்டி.


வடிவேலு வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட கேரக்டர்தான் என்று தெரியாத 
வண்ணம் அவருக்கு புத்திசாலித்தனமாக காட்சிகளை ஒதுக்கி இருக்கிற
விதம் அழகு.பஸ் கூட்டத்தில் முன் பின் தெரியாத பெண்ணின் மடியில்
அமர்வது..காந்த டிரஸ் போட்டு இரும்புக்குண்டினால்  முக்கிய இடத்தில் 
அடி வாங்குவது.,என வடிவேல் கேப் கிடைக்கிற இடத்தில் எல்லாம்
பொங்கல் வைக்கிறார்.

அசினின் அப்பாவாக வரும் ராஜ்கிரண் கண்ணியமான ,கச்சிதமான நடிப்பு.
அசினுக்கு அம்மாவாக ரோஜா வருவது காலத்தின் கட்டாயம்.ஆரம்பக்காட்சிகளில் ரோஜா விஜய்யை தேவை இல்லாமல் கண்டிப்பது.. டீஸ்  செய்வது தேவை அற்ற தெனாவெட்டு..( விஜய் ரசிகர்களின் ஏகோபித்த எதிர்ப்பைப்பெறும் அளவு அவருக்கு ஓவர் இடம் கொடுத்தது இயக்குநரின் தவறு)

அசினின் தோழியாக வருபவர் நல்ல ஃபிகர்தான். அவர் வரும் காட்சிகளில்
துப்பட்டாவை போனால் போவுது போட்டுக்கலாம் என்பது போல்
அலட்சியமாக உடுத்தி இருப்பதை வன்மையாக பாராட்டுகிறேன்.. ( ஹி ஹி )

படத்தின் ஓப்பனிங்க் பாட்டான விண்ணைக்காப்பான் ஒருவன்,,பாட்டில் விஜய் -ன் டான்ஸ் வழக்கம் போல் கலக்கல்.அதேபோல் ஓப்பனிங்க் பாக்சிங்க் ஃபைட்டில் அவரது ஆக்ரோஷம் அப்ளாஸ் அள்ள வைக்கும் நடிப்பு.

டான்ஸ் மாஸ்டரை காலேஜை விட்டு துரத்தி விட்டு விஜய் டான்ஸ்
பிராக்டீஸ் தருவது செமயான சீன் தான். ஆனால் அந்தக்காட்சியில் விஜய் 
இன்னும் நல்லா பண்ணி இருந்திருக்கலாம்.( வாடி வாடி கை படாத சி டி பாட்டு
 டான்ஸ் மாதிரி அந்தப்பாட்டை கலக்கல் ஹிட் ஆக்கி இருக்க வேண்டியதை
ஹேர் இழையில் தவற விட்டு விட்டார்கள்.)

அசினின் நடிப்பில் பழைய நளினம் மிஸ்ஸிங்க்.கஜினி ஹிந்தி படத்துக்குப்பிறகு  அவரிடம் பழைய துள்ளலை பார்க்க முடிய வில்லை.இருந்தாலும் கதையின்  தன்மையும், கேரக்டரின் போக்கும் அந்தக்குறை பெரிய அளவில் தெரியாமல்  மறைத்து விடுகிறது.



கண்ணுக்குள் நிலவு படத்துக்குப்பிறகு விஜய் இந்தப்படத்தில் இதுவரை காட்டாத பல ஃபேஸ் எக்ஸ்பிரஸ்ஸன்சை காட்டி கலக்கி விட்டார்.இந்தப்படத்தின் வெற்றி அவருக்கு புதிய தெம்பைத்தந்து தொடர்ந்து வித்தியாசமான கேரக்டர்கள் செலக்ட் பண்ண அடிகோலும் என எதிர்பார்க்கலாம்.

இந்தக்கதையில் ஆக்‌ஷன்,காமெடி இல்லாமல் முழு நீள காதல் படமாகவும் எடுத்திருக்கலாம்.. ஆனால் செக்யூரிட்டிக்காகவும்,கமர்ஷியல் காம்ப்ரமைஸூக்காகவும் அதை எல்லாம் மிக்ஸ் பண்ணி இருக்கிறார்கள். 

இந்தப்படத்தில் விஜய்க்குப்பஞ்ச் டயலாக்ஸே இல்லை.குடும்பத்துடன் காண வேண்டிய காதல் கம் காமெடி ஃபிலிம்.

No comments:

Post a Comment