Sunday, May 29, 2011

இஸ்லாம் தீவிரவாததிற்கு எதிரான சமயம்...(poda dubuku)

ஒசாமாவுக்காக  சென்னையில் ஜனாசா( இறுதி சடங்கு)தொழுகை நடந்துள்ளது...தமிழ்நாட்டில் மாற்று மதத்தினரும், முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வரும்நேரத்தில இந்த சம்பவம் முஸ்லிம்களிடையே ஒருவித தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது ......

ஒசாமா ஒரு தீவிரவாதி,உலகமே பயந்த பயங்கரவாதி என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.....
நமது உறவினர்களில், நமது நண்பர்களில் யாரேனும் ஒசாமா நடத்திய குண்டு வெடிப்பு, இரட்டை கோபுர தாக்குதல்களில் உயிர் இழந்து இருந்தால் இழப்பின் வலி நமக்கு தெரிந்து இருக்கும்....

ஒசாமாவுக்கு எதிரி அமெரிக்கா என்றால் உயிர் இழந்த மக்கள் அமெரிக்காவில் பிறந்ததுதான் அவர்களின் தவறா?இஸ்லாம் ஒருபோதும் அடுத்த மதத்தினர் மீது தாக்குதல் நடத்த சொன்னதில்லை...அப்பாவி மக்களை கொள்வதை இஸ்லாம் ஒருபோதும் ஏற்று கொள்வதில்லை.....அப்படி இருக்கையில் ஆயிர கணக்கான உயிர்களை பலிகொண்ட ஒசாமா அமெரிக்காவை எதிர்த்ததால் மட்டும் நல்லவராகிவிட முடியுமா?

ஒசாமாவின் அமெரிக்க எதிர்ப்பை நானும் ஆதரிக்கிறேன்....ஆனால் அப்பாவி மக்களை கொன்ற ஒசாமாவை எதிர்க்கிறேன்....அவரின் உடலை இறுதி தொழுகை நடத்தாமல் கடலில் வீசிய அமெரிக்காவின் செயல் கண்டனத்துக்கு உரியதே ....ஆனால் அதற்காக எல்லா மதத்தினரும் சகிப்புத்தன்மையோடும், ஒற்றுமையோடும் வாழும் தமிழ்நாட்டில் ஒசாமாவுக்காக நடத்தப்பட்ட தொழுகை தேவையற்ற ஒன்றே .....தவிர்க்க பட வேண்டிய ஒன்றே.....கண்டனத்துக்கு உரிய ஒன்றே....

Thursday, May 5, 2011

osama bin laden: தமிழ்நாடு அரசு அதிகாரபூர்வ இரக்கல் அஞ்சலி....

ஆண்டுக்கு ஒரு துணைவி கொண்டு
அடுக்கடுக்காய் பிள்ளை பெறுவதில்
முன்னுக்கு நிற்ப்பது மு.கா
என்று எண்ணியிருக்க
என்னை பின்னுக்கு தள்ளிய பின்லேடா!

இறுதியாய் ஒரு தடவை பார்த்து
காண்ணீர் விட்ட பின்
கவி வடிக்க எண்ணியிருந்தேன்,
கயவர்கள் உன்னை
கடலுக்குள் புதைத்தார்களோ!

உடன் பிறவா சகோதரனே
ஊழலில் நீ எப்படியோ தெரியல ..
ஆனாலும் உண்மையிலே
எமக்குள் ஒற்றுமை பல!

புனிதப்போர் என்று
உயிர்களை கொன்றாய் நீ
புள்ளை குட்டிக்கென்று
உடைமைகள் கொண்டேன் நான்!

மதங்களை வச்சு
மக்களை கொன்றாய் நீ
மக்களை வச்சு
ஆட்சி வென்றேன் நான்
அடிப்படையில் நமக்கு
பலிக்கடா மக்கள் தான்!

ஆரம்பத்தில் நீயும்
அமெரிக்கனின் அடிமையாமே,
கடைசி வரை நான்
காங்கிரசுக்கு அடிமை!
புளைக்க தெரியாதவன் நீ;
இன்று பார்
இடையிலே கொள்கை மாறியதால்
இறந்துவிட்டாய்!
இறுதி வரை நான்
கொண்ட கொள்கையிலே..
இறக்கும் வரை முதல்வன்!

தாடி வைத்த தூயவனே,
தங்கரதத்தில் அனுப்பியுன்னை
கொடநாட்டு பெண்மணிக்கு
குண்டு போட எண்ணியிருந்தேன்,
பாதியிலே நீ போனதால்
பதை பதைக்கிறது உள்ளம்
இன்னும் எழுத எண்ணவே
என் கண்ணீரால் நனைந்தது காகிதம்!

உண்மையை சொல்கிறேன்
இறக்கவில்லை நீ
என் போல் மனிதர்களில்
என்றும் வாழ்வாய் !

Monday, May 2, 2011

இஸ்லாமிய தீவிரவாதி கொல்ல பட்டான்......

உலகத்தையே ஆட்டிப்படைத்து, அலைய விட்ட இஸ்லாமிய திவிரவாதி ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டு விட்டார்.  இஸ்லாமாபாத் அருகே அப்போடாபாத் என்ற இடத்தில் பதுங்கியிருந்த அவரை பாகிஸ்தானின் சிஐஏ உதவியுடன் அமெரிக்கப் படையினர் கொன்றுள்ளதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவித்துள்ளார்.


இது மிகவும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சி என்றும் ஒபாமா வர்ணித்துள்ளார்.

இதுகுறித்து முப்படைத் தளபதிகள் புடை சூழ வாஷிங்டனில் ஒபாமா செய்தியாளர்களிடம் பேசுகையில், இது மிகவும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டு விட்டார். அவரது மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பின்லேடன் பதுங்கியுள்ள இடம் குறித்த உறுதியான தகவல் படையினருக்குக் கிடைத்ததும் என்னிடம் தெரிவித்தனர். நான் உடனடியாக  நடத்தி பின்லேடனைக் கொல்லுமாறு உத்தரவிட்டேன். அதன்படி நடந்துள்ளது.

இத்துடன் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் முடிந்து விட்டதாக நாங்கள் கருதவில்லை. தொடர்ந்து அதில் ஈடுபடுவோம் என்றார்.

டிஎன்ஏ பரிசோதனையின்படி ஒசாமா இறந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத்திலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில்...

பின்லேடன் கொல்லப்பட்ட இடம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 

அந்த இடத்தின் பெயர் அப்போடாபாத். இது இஸ்லாமாபாத்திலிருந்து 2 மணி நேர தொலைவில் உள்ளது. கல்வி நிறுவனங்களுக்குப் பெயர் போனது இந்த நகரம். மேலும் இந்தப் பகுதியில் பல தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகள் சுதந்திரமாக செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானின் மிகச் சிறந்த சுற்றுலாத்தளமும் இது என்பது குறிப்பிடத்தக்கது.