Saturday, June 4, 2011

இன்னும் ஒரு இஸ்லாமிய தீவிரவாதி ( பச்சை தீவிரவாதி) கொல்லப்பட்டான்

 பாகிஸ்தானின் வசீர்ஸ்தான் பகுதியில் அமெரிக்க ஆளில்லா விமானங்கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் முக்கிய தீவிரவாதி இலியாஸ் காஷ்மீரி கொல்லப்பட்டுவிட்டதாகத் தெரியவந்துள்ளது.

மும்பை தாக்குதலின் முக்கிய மூளையாக செயல்பட்டது இலியாஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹர்கத் உல் ஜிகாத் அல் இஸ்லாமி என்ற தீவிரவாத அமைப்பின் தலைவரான இலியாஸ், அல்-கொய்தாவுக்கு மிக நெருக்காக இருந்தான். இந்தியாவில் பல்வேறு தீவிரவாதத் தாக்குதல்களை திட்டமிட்டு நடத்திய இவன், மும்பையில் நடந்த பயங்கர தாக்குதலை ஒருங்கிணைத்தவன் ஆவான்.

இந்தத் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஹெட்லி அமெரிக்க நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில், மும்பை தாக்குதலில் ஐஎஸ்ஐ மற்றும் இலியாசுக்கு உள்ள தொடர்புகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தார்.

இது தவிர அமெரிக்கப் படைகளுக்கு எதிராக ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் ஏராளமான தீவிரவாதத் தாக்குதல் நடத்தியுள்ளான் இலியாஸ். சமீபத்தில் பாகிஸ்தானின் கடற்படைத் தளத்தைத் தாக்கி 3 உளவு விமானங்களை தீயிட்டு எரித்த தாக்குதலிலும் இலியாசுக்கு மிக முக்கிய பங்குண்டு.

இந் நிலையில் ஒசாமாவின் மரணத்தைத் தொடர்ந்து அல்-கொய்தா தலைவராக இலியாஸ் காஷ்மீரி தேர்வாகக் கூட வாய்ப்புள்ளதாக அமெரிக்க உளவுப் பிரிவினர் கூறியிருந்தனர்.

இதையடுத்து அல்-கொய்தா தலைவர் ஜவாஹிரி, தலிபான் தலைவர் முல்லா ஒமர், இலியாஸ் காஷ்மீரி உள்ளிட்ட 9 தீவிரவாதிகளின் பட்டியலை சமீபத்தில் பாகிஸ்தானிடம் வழங்கிய அமெரிக்கா அவர்களை ஜூலை மாதத்துக்குள் ஒழித்துக் கட்ட வேண்டும் என்று கெடு விதித்தது. இல்லாவிட்டால் நாங்கள் களமிறங்குவோம் என்று எச்சரித்தது.

அதே போல இந்தியாவில் நடந்த பல்வேறு தாக்குதல்களுக்குக் காரணமான 50 தீவிரவாதிகளின் பட்டியலை பாகிஸ்தானிடம் மத்திய அரசு வழங்கி, அவர்களை தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரியது. இந்தப் பட்டியலில் தாவூத் இப்ராகிமுடன் இலியாசின் பெயரும் இடம் பெற்றிருந்தது.

இந் நிலையில் பாகிஸ்தானில் தீவிரவாதத்துக்குப் பேர் போன சுயாட்சி கொண்ட வட-மேற்கு எல்லைப் புற மாகாணமான வசீர்ஸ்தான் பகுதியில் இன்று அமெரிக்க ஆளில்லா உளவு விமானம் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இலியாஸ் காஷ்மீரி உள்பட 9 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது.

வானாபஜார் என்ற இடத்தில் ஆலோசனையில் ஈடுபட்டிருந்த 20 தீவிரவாதிகளை குறி வைத்து இந்தத் தாக்குதல் நடந்ததாகவும் அதில் இலியாஸ் உள்பட 9 பேர் பலியாகிவிட்டதாகவும் தெரிகிறது.

கைபர் பகுதியிலிருந்து வந்த இலியாஸ் வசீர்ஸ்தானில் தனது கூட்டாளிகளுடனன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

இலியாஸ் காஷ்மீரியின் நடமாட்டத்தை அமெரிக்கா கடந்த சில நாட்களாகவே ரகசியமாக கண்காணித்து வந்ததாகத் தெரிகிறது. சரியான சமயம் கிடைத்தவுடன் ஆளில்லா உளவு விமானங்கள் மூலம் ஏவுகணையை வீசி காலி செய்துள்ளது.

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் அமெரிக்கா நடத்தியுள்ள ஆளில்லா உளவு விமானத் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் அமெரிக்காவுக்கு இந்த ஆளில்லா விமானங்களைத் தயாரித்து வழங்கி வரும் லாக்ஹீட் மார்டின் நிறுவனத்தின் மீது எரிச்சலில் இருந்த இலியாஸ் காஷ்மீரி அந்த நிறுவனத்தின் தலைவரை கொலை செய்யத் திட்டமிட்டிருந்ததாக அமெரிக்க நீதிமன்றத்தில் ஹெட்லி வாக்குமூலம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் அதே ஆளில்லா உளவு விமானம் மூலம் காஷ்மீரியைக் கொன்றுள்ளது அமெரிக்கா.